
Nayanmaar Kathai (Part IV)
நாயன்மார்கள் அறுபத்து மூவர் தொகையடியார் ஒன்பது வகையினர். இந்த எழுபத்திரண்டு பேர்களின் வரலாறுகளையும் சேக்கிழார் விரிவாகப் பெரிய புராணத்தில் பாடினார். அந்த வரலாறுகளை உரைநடையில் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'அமிர்தவசனி' ஆசிரியர் ஸ்ரீ சு. முத்துசாமி ஐயரவர் கள் தம் பத்திரிகையில் நாயன்மார் வரலாற்றுப் படங்களை வெளியிட இருப் பதாகவும், அந்தப் படங்களுக்கு விளக்கமாக நாயன்மார் வரலாற்றைச் சுருக்கமாக எழுதித்தர வேண்டும் என்றும் கேட்டார். அப்படியே எழுதிவந்தேன். சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை இறுதியில் விரிவாக எழுதிப் பிறகு சேக்கிழார் வரலாற்றையும் எழுதி முடித்தேன்.
இடையில் 'காமகோடிப்' பிரதீபத்'தில் திருஞானசம்பந்தர் சரித்திரத்தை எழுதும்படி ஸ்ரீ கே. பாலசுப்பிரமணிய ஐயர் பணித்தார். அதில் விரிவாக அவ் வரலாற்றை எழுதினேன்.
என் உழுவலன்பரும் அமுதநிலையம் தலைவருமாகிய ஸ்ரீ ரா.ஸ்ரீ.ஸ்ரீகண்டன் அவர்கள் இவற்றைப் புத்தக உருவில் கொண்டுவந்தால் பலரும் படித்துப் பயன் பெறுவார்கள் என்று சொன்னார். அவர் விருப்பப்படியே இவற்றைத் தொகுத்து நான்கு பகுதிகளாக வெளியிடலானேன். முதல் பகுதியில் நமிநந்தி யடிகள் நாயனார் வரலாறு முடிய இருபத்தேழு தொண்டர் வரலாறுகள் வெளியாயின. இரண்டாம் பகுதி முழுவதும் திருஞானசம்பந்தர் வரலாறாகவே அமைந்தது. மூன்றாம் பகுதி ஏயர்கோன் கலிக்காம நாயனார் முதல் திருவாரூர்ப் பிறந்தார் வரையிலுள்ள 33 தொண்டர்களின் வரலாறுகள் அடங்கியதாக அமைந்தது.
- Forfatter
- Ki Va Jagannathan
- ISBN
- 9788198357113
- Språk
- Tamil
- Vekt
- 310 gram
- Utgivelsesdato
- 10.12.2024
- Forlag
- Nilan Publishers
- Antall sider
- 90
