
Ullam Kavar Kalvan
சிவபெருமானுடைய புகழைச் சொல்லும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு திருமுறைகளில் முதல் ஏழும் தேவாரம் என்னும் பெயரை உடையவை. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவரும் பாடியவற்றைத் தேவாரம் என்று வழங்குவர். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாந் திருமுறை. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை. திருமூலர் திருமந்திரம் பத்தாம் திருமுறை. ஆலவாய் இறைவன் திருமுகப் பாசுரம் முதல் காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய பலர் பாடிய நூல்களின் தொகுதி பதினோராந் திருமுறை. பெரிய புராணம் பன்னிரண்டாந் திருமுறையாகும்.
முதல் இராசராச சோழன் காலத்தில் நம்பியாண்டார்நம்பி என்னும் பெரியார் பதினொரு திருமுறைகளை வகுத்தார். என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. அம் மன்னன் காலத்துக்கு முன் தேவாரப் பதிகங்கள் முதலியன பலவாறாகப் பாடப்பெற்று வந்தன. அவற்றைக் கண்டெடுத்து ஒழுங்கு படுத்தும் தொண்டு புரிந்தவன் இராசராச சோழன்.
இந்தப் பன்னிரண்டு திருமுறைகளில் முதல் மூன்றும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இயற்றியவை. நான்கு முதல் ஆறாவது திருமுறைகள் வரையில் உள்ளவை திருநாவுக்கரசு நாயனார் இயற்றியவை. ஏழாவது திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது. இந்த ஏழுமே தேவாரம் என்றும் அடங்கல்முறை என்றும் வழங்கப்பெறும்.
- Forfatter
- Ki Va Jagannathan
- ISBN
- 9788199934948
- Språk
- Tamil
- Vekt
- 118 gram
- Utgivelsesdato
- 6.3.2026
- Forlag
- Nilan Publishers
- Antall sider
- 80
