Gå direkte til innholdet
Palli Vaazhkai
Spar

Palli Vaazhkai

Forfatter:
pocket, 2025
Tamil

பள்ளி வாழ்க்கை படிக்கும் மாணவரின் எண்ணங்களை, பழக்க வழக்கங்களை உருக்கி வளப்படுத்தி, பண்படுத்தி, பண்பட்ட மனித இனத்தை உருவாக்கிடும், உலைக்கூடம், 'பள்ளி வாழ்க்கை'

ஒப்பற்ற கருத்து; ஒவ்வொருவரும் உணர வேண்டிய கருத்து, கலைஞர். மு. கருணாநிதி தந்த கருத்து

மனிதன் மனிதனாக வாழவேண்டும் 'வாழ்க்கை வாழ்வதற்கே'என்ற எண்ணத்துடன் வாழவேண்டும் என்ற பாடமாக, 'பள்ளி வாழ்க்கை'அமைக்கப்பட வேண்டும்

கலைஞர் கருணாநிதியின் கருத்துரைகளை, சிந்தனைத் துளிகளை, வருங்காலச் சிற்பிகளைச் சமைத்துத்தந்திடும் உலைக்கூடமான, 'பள்ளி வாழ்க்கை பற்றிய அவரது எண்ணக்கோட்டையை, ருவாக்கித் தருகிறோம், புத்தக வடிவில், உலைக்கூடம், உருவான, உபயோகமுமுள்ள உலைக்கூடமாகத் திகழவேண்டியதின் அவசியத்தை, நாடும், நாமும் அறிந்து, ஆவன செய்திட வேண்டும், என்ற ஆர்வத்துடிப்பால்

கலைஞர். மு.கருணா நிதி அவர்கள் தாம் கற்றுத் தேர்ந்த திருவாரூர் நகராண்மைக் கழக உயர் நிலைப்பள்ளியிலும், வேறு சில இடங்களிலும் பேசியவற்றைத் தோழர் மு. நமசிவாயம் அவர்கள் திரட்டியதின் விளைவே 'பள்ளி வாழ்க்கை'.

பள்ளி வாழ்க்கை மானிட வாழ்க்கையிலே வளமான ஒரு பகுதி மானிடரின் வாழ்வை வளப்படுத்தும் பகுதி, வகைப்படுத்தும் பகுதியாகும்

மானிட இனம் உலகில் பிறந்து வளர்ந்து, மழலைப் பருவங்கடந்து, பாலப் பருவந் தொடங்கிடும் நேரத்திலே பள்ளி வாழ்க்கையும் தொடங்குகிறது

பள்ளி வாழ்க்கை புகும்பேறு, ஆம் இதனைப் பேறு, பாக்கியம் என்றுதான் குறிப்பிட வேண்டும், வெகு சிலருக்குத் தான் இந்த நாட்டில் கிடைக்கிறது, கிடைக்கும் வசதி, வாய்ப்பு, வாழ்க்கைத்தரம், வாழ்க்கை வசதி அமைந்திருக்கிறது.

Forfatter
M Karunanidhi
ISBN
9788199645028
Språk
Tamil
Vekt
132 gram
Utgivelsesdato
1.12.2025
Antall sider
66