
Nalla Pillaiyar
நல்ல பிள்ளையார்
(சிறுவர்களுக்குரிய கதைகள்)
கி.வா.ஜகந்நாதன்
சிறுவர்கள் படித்து மகிழ்வதற்குரிய பத்துக் கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. நம் நாட்டில் வழங்கிவரும் நாடோடிக் கதைகள் சிலவற்றைத் தழுவி எழுதிய கதைகளையும் நானாகக் கற்பனை செய்து எழுதிய கதைகளையும் இதில் காணலாம்.
குழந்தைகளுக்குக் கதை கேட்பதென்றால் மிகவும் ஆசை, என்னுடைய பேரன் சிரஞ்சீவி குகனுக்கு அவ்வப் போது கதைகள் சொல்வது வழக்கம். நாயன்மார் கதை முதலிய பழங்கதைகளையும் புதிய புதிய கற்பனைக் கதைகளையும் சொல்லி வருகிறேன். அவற்றைக் கேட்டு மேலும் மேலும் கதைகள் சொல்லவேண்டும் என்று நச்சரிக்கிறான். அதற்காகவே என்னுடைய கற்பனைக் குதிரையைத் தட்டி ஓட விட வேண்டியிருக்கிறது. மற்றக் குழந்தைகளும் இவற்றைக் கேட்டும் படித்தும் மகிழவேண்டும் என்ற எண்ணத்தால் இவற்றைப் புத்தக உருவில் வெளியிடலானேன்.
இதைப்போலவே மேலும் சில புத்தகங்கள் வெளியாகும்.
- Forfatter
- Ki Va Jagannathan
- ISBN
- 9788197712234
- Språk
- Tamil
- Vekt
- 310 gram
- Utgivelsesdato
- 1.7.2024
- Forlag
- Nilan Publishers
- Antall sider
- 46
