Gå direkte til innholdet
Kannanin Thirukathai
Spar

Kannanin Thirukathai

Forfatter:
Tamil

பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள் எனப்படு கின்றன. வீர வரலாற்றைக் காவியமாகக் கூறினால் அஃது இதிகாசம் எனப்படுகிறது.

இஃது இதிகாசம் ஆகாது; தெய்வக்கதை; தெய்வம் மானிடனாக அவதரித்து மனிதனைப் போல இயங்கி, தெய்வசக்தியோடு செயல் ஆற்றி வாழ்ந்த கதை இது.

கண்ணனின் கதை. அவன் ஒரு மாவீரன் என்பதற்காகப் பேசப்படுவது இல்லை; பிள்ளைமை அழகுடையது. அனைவரையும் மகிழ்வித்தவன், 'வீரன்'என்றால், அஃது அருச்சுனனைத்தான் குறிக்கும்; அவன் செயல் சிறந்தது; அதற்கு வழிகாட்டி கண்ணன்; "வில் அம்பினைவிட அறிவு. கூர்மை வாய்ந்தது"என்பது இவனிடம் காணப்படுகிறது. வலிமை மட்டும் வெற்றியைத் தந்துவிடாது; அறிவுக் கூர்மை; "இதுவே வெற்றி தரும்"என்பதனைக் கண்ணன் கதை காட்டுகிறது.

பிறந்த உடனே இடம் மாறிவிடுகிறான்; கம்சன் ஏமாற்றப்படுகிறான்; அவன் அறிவுத் திறன் அவன் குறும்புகளில் வெளிப்படுகிறது; தீராத விளையாட்டுப் பிள்ளை; பெண்களுக்கு ஓயாத தொல்லை"என்ற பெயர் வாங்குகிறான்; யோகிகளைப் போலச் சிரிக்காமல் அவன் வாழவில்லை; "பெரியவர் என்றால் சிரிக்கக் கூடாது."என்ற போலித்தனம் அவனிடம் இல்லை; அவன் ஒவ்வொரு செய்கையிலும் ஒரு புதுமை, ஒரு சிரிப்பு, ஓர் அற்புதம், திடுக்க வைக்கும் சாதனைகள் இவை எல்லாம் அவனை நேசிக்கச் செய்கின்றன.

முடியில் மயிற்பீலி; மஞ்சள் நிற ஆடை; துளப மாலை; கையில் குழல்; அதில் எழுப்பும் ஓசை எங்கும் இன்பத்தை மூட்டுகிறது. அவன் குழல் இசை கேட்டு மயங்காதார் இல்லை; அந்த வகையில் அவன் ஓர் இசைக் கலைஞனாய் மற்றவர்களை மகிழ்விக்கிறான்; மகளிரோடு சேர்ந்து, குரவைக் கூத்து ஆடி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.

Forfatter
R. Seenivasan
ISBN
9788199887732
Språk
Tamil
Vekt
168 gram
Utgivelsesdato
6.3.2026
Antall sider
118