Gå direkte til innholdet
Everest in Mind (Tamil)
Spar

Everest in Mind (Tamil)

pocket, 2022
Tamil

குறைவாகப் பயணித்த சாலையே மாலாவத் பூர்ணாவால் அவளுடைய வாழ்க்கையின் நோக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் பூர்ணா இந்த வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முதல் ஆளில்லை. கடைசி நபரும் கிடையாது. பிறகு ஏன் அவளது பயணத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது? இந்தப் பாதையில் அவள் என்ன சாதித்தாள்? அவள் தன்னுடைய இளம் வயதை முன்னிறுத்தி எந்த அளவிற்குப் பெயர் மற்றும் புகழ் அடைந்தாள்? அவள் வாழ்க்கையின் இலக்கு என்ன? வாழ்க்கையில் அவளுக்கு நிலையான ஆதரவாக இருந்தது யார்? எதற்காக அவர்கள் அவள் பயணத்தில் இருந்தார்கள்? ஏன் பூர்ணாவை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்?

பூர்ணாவின் மலையேறுதல் பயணம் பல அறியப்படாத உத்வேகங்கள், உயிர் கொடுக்கும் முதன்மையான சக்திகள், சிந்தனை இலக்கு மற்றும் சாதனையாளகளின் செயல்முறை, அவர்களின் உடல், மன நிலைகள் ஆகியவற்றின் ஊடே நம்மைப் பயணிக்க வைக்கிறது. அவளுடைய வாழ்க்கையை அறிந்த பிறகு மட்டுமே நம்மால் இதை உணர முடியும். இயற்கை என்பது காதல் மற்றும் புரிதலை அனுபவிப்பதற்கான ரகசியம். ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ரஹஸ்யம் கை வந்த கலையாகிறது. இறுதியாக, ஒரு நபரின் எண்ணங்கள், கருத்துகள், நம்பிக்கைகள், மற்றும் அனுபவங்களே அவர்களின் தேர்வுகள் மற்றும் நீக்குதல்களை செய்கின்றன. மனிதர்களிடையே, விசித்திரமான ஒரு சாரார் உள்ளனர். இவர்கள் ஆபத்தான பயணங்களுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். அவர்களின் பயணம் அவர்களின் ஆன்மாவின் கட்டளையின்படி நகர்கிறது. அது அவர்களின் தெளிவான மனசாட்சியும் கூட. அவர்களது மிகுந்த எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவர்களை இயற்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், உலகின் ஒரு பகுதியாகவும் பின்னர்

தங்களின் ஒரு பகுதியாகவும் ஆக்குகின்றன.

Oversetter
Geetha Sunil
ISBN
9788195677368
Språk
Tamil
Vekt
191 gram
Utgivelsesdato
20.11.2022
Antall sider
150