Siirry suoraan sisältöön
Ulaga Cinema 6
Tallenna

Ulaga Cinema 6

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அதுவே, இந்த முயற்சிக்கான மூலகாரணம். இந்த கட்டுரைகள் அத்தனையையும் ஒருவர் படித்து விட்டாரென்றால், நிச்சயம் உலகத்தை மயில் வாகனம் இல்லாமலேயே சுற்றி வந்து விட்ட உணர்வை ஏய்துவார் என்பது திண்ணம். அத்தனை சுவாரஸ்யங்கள் இதற்குள் பொதிந்து இருக்கின்றன. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது கப்பலில், விமானத்தில், உலக நாடுகளுக்கு போய் பணம் ஈட்டுவது மட்டுமல்ல, கப்பலோ, விமானமோ ஏறாமலே, இருந்த இடத்திலிருந்தே, கொஞ்சம் நேசிப்போடு உலக சினிமாவை தேடினால், திரை மகள் நம்மை தேடி வருவாள். புதுச்செல்வம் தருவாள். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல. கலைமகள் தருகிற அறிவுச் செல்வமும் செல்வம் தான். அதை திரைகடல் தாண்டி இருக்கிற அத்தனை உலக நாடுகளின் திரைக்காவியங்களை இந்த உலக சினிமா புத்தகங்களின் வாயிலாக தரிசிக்க இருக்கிறீர்கள். அந்த அனுபவம், நம்மை திரும்ப திரும்ப அதை நினைத்து, பரவசிப்பில் ஆழ்த்தக்கூடிய வல்லமை கொண்டது. RECOMMENDATION: நண்பர் குலசேகரை சந்திச்சது முதமுதலா சென்னை இன்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல்ல தான். அதில இருந்து ஒவ்வொரு ஃபெஸ்டிவல்லயும் தவறாம சந்திச்சு பேசிக்குவோம். அவரோட பேசிட்டிருக்கும் போது அவருக்குள்ள இருக்கிற சினிமா பத்தின புரிதல் கடல் மாதிரி விரியறதை உணர்ந்திருக்கேன். இவர் எழுதி இருக்கிற உலக சினிமா புத்தகம், அகராதி, அட்லஸ் மாதிரி ஒவ்வொருத்தர் வீட்லயும் அவசியம் இருக்கணும்னு நெனைக்கிறேன்.- இயக்குநர் ஜெயபிரகாஷ்ராதாகிருஷ்ணன்
ISBN
9789354902680
Kieli
tamili
Paino
310 grammaa
Julkaisupäivä
30.1.2024
Sivumäärä
125