Siirry suoraan sisältöön
Nalla Tamizhil Ezudhuvom
Tallenna

Nalla Tamizhil Ezudhuvom

Kirjailija:
pokkari, 2023
tamili
தமிழில் பிழையின்றி அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இந்த நூல் உங்களுக்கானதுதான் பலரும் நினைப்பதுபோல், தமிழ் இலக்கணம் என்பது அச்சுறுத்துகிற விஷயம் இல்லை; தமிழில் பிழையின்றி எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை; கொஞ்சம் அக்கறையும் முனைப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் என்பதையெல்லாம் இந்த நூல் தெளிவாக விளக்குகிறது, அதட்டாமல், மிரட்டாமல் இலக்கணச் சூத்திரங்கள், இலக்கிய எடுத்துக்காட்டுகளில் தொடங்கித் திரைப் பாடல்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றின் வழியாக எளிமையாகவும் அழகாகவும் தமிழைக் கற்றுத்தருகிறது. என். சொக்கனின் சுவையான எழுத்தில் வெளியாகிப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுடைய பாராட்டுகளைப் பெற்ற இந்த நூல், இன்றைய தலைமுறைக்குத் தமிழை மிக எளிதாகவும் சிறப்பாகவும் அறிமுகப்படுத்துகிறது. வாங்கிப் படியுங்கள், தினமும் அரை மணி நேரம் போதும், சில நாட்களுக்குள் உங்கள் எழுத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
Kirjailija
N Chokkan
ISBN
9789393882295
Kieli
tamili
Paino
395 grammaa
Julkaisupäivä
1.2.2023
Sivumäärä
310