Siirry suoraan sisältöön
Akbar
Tallenna

Akbar

சிறந்த போர் வீரர், மிக நல்ல நிர்வாகி, கனிவோடும் அன்போடும் அனைவரையும் அரவணைத்துச்செல்கிற ஒரு தலைவர், மனத்தைக் குறுக்கிக்கொள்ளாமல் விரிவாக்கிச் சிந்தித்த மனிதர், கல்வியை, கலைகளை ஆதரித்த அரசர், இந்திய வரலாற்றின் முதன்மையான ஆட்சியாளர்களில் ஒருவராக அக்பர் மாறியது இப்படிதான் மற்ற பல அரசர்களைப்போலவே, இவருடைய ஆட்சியும் குழப்பமான ஒரு சூழ்நிலையில்தான் தொடங்கியது. அதே நேரம், வாளையும் அன்பையும் சரியான சமநிலையோடு பயன்படுத்தித் தன்னுடைய ஆட்சி எல்லைகளையும் ஆதரவாளர்கள் கூட்டத்தையும் விரிவாக்கிக்கொள்ள அவரால் இயன்றது. தன்னுடைய கருத்துகள், நம்பிக்கைகளுடன் பொருந்திப்போகாதவர்களையும் ஆதரித்து அவர்கள் தரப்பைக் கேட்கும் பரந்த உள்ளம் அவருக்கு இருந்தது. தன்னைச் சுற்றித் திறமையாளர்களை நிரப்பிக்கொண்டும், அவர்களை நன்கு பயன்படுத்திக்கொண்டும் ஆட்சிபுரிந்தார். இந்தியாவில் முகலாய ஆட்சியை இன்னும் வலுவாக்கினார். அக்பரின் சுவையான வாழ்க்கையை எளிமையான முறையில் அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
Kirjailija
N Chokkan
ISBN
9789395222242
Kieli
tamili
Paino
310 grammaa
Julkaisupäivä
1.2.2023
Sivumäärä
158