Gå direkt till innehållet
Valluvarum Kuralum
Spara

Valluvarum Kuralum

Lägsta pris på PriceRunner

திருக்குறள் உலக நூல்களில் உயர்ந்த நூல்; தமிழர்களுக்கு தெவிட்டாத அறிவு விருந்து. எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் எவ்வளவோ அரசியல், சமய, சமுதாய மாறுதல்கள் ஏற்பட்டு மாறிய பிறகும், திருவள்ளுவரின் நூல் இன்று நம்முடன் வாழ்ந்து நமக்காக அறிவுரை கூறும் சான்றோர் ஒருவரின் தெளிந்த வாய்மொழி போல் விளங்குகிறது.

இவ்வளவு உயர்ந்த நூலைப் பற்றி ஒரு சொற்பொழிவு நடைபெறுகிறது என்றால், அது பலருடைய உள்ளத்தையும் கவர்தல் இயற்கை, சொற்பொழிவு ஆற்றுகின்றவர் தேர்ந்த பேச்சாளர் என்றால், இச்சிறப்புப் பலமடங்கு ஆவதும் இயற்கையே.

திருவாளர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எதையும் சுவைபடப் பேசுவதில் வல்லவர். நுண்ணிய கருத்துக்களுக்கும் அழகிய வடிவம் தந்து, வினாவிடை புகுத்திக் கேட்போருக்கு வேட்கையை வளர்த்து விருந்து நல்குவது அவர்தம் பேச்சு.

சொற்பொழிவாளர், திருவள்ளுவரைப் பற்றிய கதைக் குப்பைகளை எல்லாம் கட்டுக்கதை என ஒதுக்கியது மகிழத் தக்கது. திருவள்ளுவர் கூறும் உவமைகளை எல்லாம், அரிய சிறுகதைகளாகக் கூறி விளக்கி உவமைத் திறனைப் பாராட்டியுள்ளார் ஆசிரியர். அதிகாரிகளுக்கும் குடிகளுக்குமிடையே உள்ள உறவும், ஒருவர் மற்றொருவரிடம் நடக்க வேண்டிய முறையும், குறள் மொழியால் எடுத்துரைக்கப்படும்பொழுது, கேட்டோர் உள்ளம் போலவே கற்போர் உள்ளமும் களிப்புறுகின்றது, நகையாசையைப் பற்றிப் பேசுவார் போல் தொடங்கிக் கண்ணுக்கு அணிகலமாகும். கண்ணோட்டத்தைக் கூறும் பகுதி நயமாக உள்ளது. 'ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்' பெற்றது ஒன்று,

ISBN
9788198921130
Språk
Tamil
Vikt
310 gram
Utgivningsdatum
2025-07-01
Sidor
82