Gå direkt till innehållet
Mutthaaram
Spara

Mutthaaram

Författare:
Tamil
Lägsta pris på PriceRunner

முத்தாரத்தில் இடம் பெற்றுள்ள தலைப்புகளில் புதுமை எதுவுமில்லை.இத்தகைய தலைப்பு களிலே வர்ணனைகள்

கருத்துரைகள் பல அறிஞர்கள் இதய ஓடையிலே மலர்ந்துள்ளன. ஆனால் கலைஞர் கருணாநிதி தமக்கே இயல்பான தமிழோட்டத்தால் அவைகட்குப் புதிய அழகு தந்துள்ளார். எழிலே உருவான தாஜ்மஹாலுக்கு எத்தனையோ கோணங்களில் நிழற்படங் கள் உள்ளன். அவைகளில் கவர்ச்சி மிக்கவை சிலதான் 'அந்த சிலவற்றிலே ஒன்று இந்த முத்தாரம் என்பதை தமிழகம், தீர்ப்பாக வழங்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

சிந்தித்திட எழுதிட - கருணாவிற்கு ஓய்வே யிருப்பதில்லை. இயக்கவேலைகளில் இடையறாது பணியாற்றும் அவரை சிறையிலே பூட்டி அவர் பணியைத் தடுத்திட முயன்றனர் அரசியலார்.

ஆனால், அவர் எதிர்ப்பையும் சாதகமாக்கிக் கொண்டு. இந்த எழிலேட்டைத் தமிழ் பூமிக்கு வழங்குகிறார்.

கவிதை மணங்கமமும் - முற்றிலும் புது முறை உரை நடை ஓவியத்தைத் தீட்டிக் காட்டும் கலைஞருக்கு எமது நன்றியை உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

'முத்தாரம்'என் சிறைவாழ்வின் விளைவு. ஆரத்தில் நகை முழக்கும் முத்துக்கள், நாட்டுநிலை - சமுதாய நிலை இன்ன பிறவற்றை புதிய முறையில் எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவையெனக் கருதுகிறேன்.

அறிவுலகம் வாழ்த்து பாடி ஊக்க மூட்ட வேண்டுகிறேன்.

முத்துக்களை மாலையாக்கிய நண்பர் முத்துவுக்கு நன்றி

Författare
Karunanidhi M
ISBN
9788198414038
Språk
Tamil
Vikt
310 gram
Utgivningsdatum
2024-12-01
Sidor
46