Gå direkt till innehållet
A Deadly Affair (Tamil)
Spara

A Deadly Affair (Tamil)

Författare:
Tamil
காதலால் நம்மைப் பெரும் உச்சங்களுக்கு உந்தித் தள்ளவும் முடியும், இருண்ட அதலபாதாளங்களுக்குள் தள்ளிவிடவும் முடியும். இச்சிறுகதைத் தொகுப்பில், காதல் போதையில் நிகழ்கின்ற குற்றங்கள், இதயங்கள் ஆடுகின்ற சதி விளையாட்டுகள், பயங்கரமான நயவஞ்சகங்கள் போன்ற, காதலின் இருண்ட பக்கங்களை அகதா கிறிஸ்டி நம் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார். உங்கள் இதயத்துடிப்பை எகிற வைக்கின்ற இக்கதைகளில் பொதிந்திருக்கும் மர்மங்களையும் புதிர்களையும் விடுவிப்பதற்கு, உங்களுக்குப் பரிச்சயமான துப்பறிவாளர்களான ஹெர்கியூல் புவாரோ, மார்ப்பிள், உண்மையைத் தோலுரிப்பதற்காகக் கபட நாடகம் ஆடுவதில் வல்லவரான பார்க்கர் பைன், புதிராகத் தோன்றிப் புதிராக மறைகின்ற ஹார்லி குயின், சாகசங்களை விரும்புகின்ற தம்பதியரான டாமி மற்றும் டப்பென்ஸ் ஆகியோர் அணிவகுத்து வருகின்றனர். ஒரு முக்கோணக் காதலில் மாட்டிக் கொண்ட ஒரு பெண்ணைத் தீர்த்துக் கட்ட ஒரு காதலன் மேற்கொண்ட குயுக்தியான முயற்சி; தீய நோக்கங்களை மறைப்பதற்காக, ஆர்வத்தைத் தூண்டுகின்ற விதத்தில் வெளியிடப்பட்ட ஒரு சுவாரசியமான விளம்பரம்; குற்றம் நிகழ்வதற்கு முன்பே சந்தேகத்திற்கு இடமானவர்களை இனம் காணுகின்ற வித்தை போன்றவை இதில் இடம் பெற்றுள்ள சில கதைகளின் கதைக்களங்கள். ஒட்டுமொத்தத்தில், அகதா கிறிஸ்டியின் இரசிகர்களுக்கு ஓர் அருமையான விருந்து இத்தொகுப்பு.
Författare
Agatha Christie
Översättare
PSV Kumarasamy
ISBN
9789355434951
Språk
Tamil
Vikt
220 gram
Utgivningsdatum
2024-05-13
Sidor
288